அமெரிக்காவின் தொடரும் ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கை: இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் கண்டிப்பு
அமெரிக்காவின் தொடரும் ஆயுதமேந்திய கொள்ளை நடவடிக்கை: இந்தியக் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் கண்டிப்பு
ADDED : ஜூன் 12, 2026 06:41 AM

டெஹ்ரான்: இந்தியக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் அரசின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறியதாவது: மூன்று இந்திய நாட்டினரைக் கொன்ற, இந்திய வர்த்தகக் கப்பல்கள் மீதான அமெரிக்காவின் கொடூரமான தாக்குதல்கள், அமெரிக்காவின் தொடர்ச்சியான ஆயுதக் கொள்ளை மற்றும் அரச கடற்கொள்ளைக் கொள்கைக்கு சான்றாகும்.
கொல்லப்பட்ட இந்திய மாலுமிகளின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்திய மக்களுக்கும், அரசிற்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாகவும், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு ஆபத்தாகவும் இருக்கும் அமெரிக்காவின் சட்டவிரோத நடத்தைக்கு சர்வதேச சமூகம் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
