சர்வதேச அணுசக்தி முகமையின் அணு ஆயுத ஆய்வுகளுக்கு ஈரான் மறுப்பு; டிரம்ப் பதில் இதுதான்
சர்வதேச அணுசக்தி முகமையின் அணு ஆயுத ஆய்வுகளுக்கு ஈரான் மறுப்பு; டிரம்ப் பதில் இதுதான்
ADDED : ஜூன் 24, 2026 07:13 AM

வாஷிங்டன்: சர்வதேச அணுசக்தி முகமையின் அணு ஆயுத ஆய்வுகளை ஈரான் மறுத்தால், அந்நாட்டுடனான சந்திப்புகளை ரத்து செய்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருகிறது. ஈரானின் நிலை கணிசமாக பலவீனமடைந்துள்ளது. ஈரானுடன் நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம். அவர்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டனர், நாங்கள் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்து வருகிறோம், அது எப்படிப் போகிறது என்று பார்ப்போம்.
சர்வதேச அணுசக்தி முகமையின் அணு ஆயுத ஆய்வுகளை ஈரான் மறுத்தால், அந்நாட்டுடனான சந்திப்புகளை ரத்து செய்து விடுவேன். நீங்கள் நேற்று கேள்விப்பட்டிருக்கலாம், ஹார்முஸ் ஜலசந்தியின் வழியாக வரலாற்றிலேயே இல்லாத வகையில் கச்சா எண்ணெய்கள் கப்பல்களில் கொண்டு செல்லப்படுகிறது.
ஈரானின் அணுசக்தி லட்சியங்கள் முக்கிய விஷயம் என்னவென்றால், ஈரான் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது. இதுவரை யாரும் கண்டிராத ஒரு நிலையில் ஈரான் உள்ளது . இதை மற்ற அதிபர்கள் 47 ஆண்டுகளாகச் செய்திருக்க வேண்டும். மேலும், ஈரானின் ராணுவம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. அதன் தலைமை அழிக்கப்பட்டுவிட்டது. அதன் ரேடார் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டது. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறினார்.
