ஈரான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒருவருக்கு துாக்கு
ஈரான் இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மேலும் ஒருவருக்கு துாக்கு
ADDED : டிச 21, 2025 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெஹ்ரான்: இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் ஈரானில் துாக்கிலிடப்பட்டார்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நடந்தது. அப்போது, இஸ்ரேல் மீது, மற்றொரு மேற்காசிய நாடான ஈரானும் தாக்குதல் நடத்தியது.
கடந்த ஜூன் மாதம், ஈரான் மீது இஸ்ரேல் 12 நாட்கள் நடத்திய வான்வழி தாக்குதல்களில், 1,100 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதன்பின், உளவு பார்த்த குற்றத்துக்காக ஈரானில், 11 பேர் துாக்கிலிடப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக மற்றொருவருக்கு நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

