மத்தியஸ்தம் செய்ய தயார்: ஈரான் அமைச்சர் அறிவிப்பு
மத்தியஸ்தம் செய்ய தயார்: ஈரான் அமைச்சர் அறிவிப்பு
ADDED : ஏப் 26, 2025 04:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பின், இந்தியா - பாக்., இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், மேற்காசிய நாடான ஈரான் வெளியுறவு அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நுாற்றாண்டு பழமையான கலாசாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன.
மற்ற நட்பு நாடுகளை போல அவர்களுக்கும் நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா - பாக்., இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.