ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு
ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு தக்க பதிலடி தரப்படும்: நெதன்யாகு
ADDED : அக் 02, 2024 06:33 AM

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கு தக்க பதிலடி தரப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று(அக்.,01) இரவு ஈரான் இஸ்ரேலை நோக்கி 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை டெல் அவிவ், ஜெருசெலம் நகரத்தின் மீது ஏவியது. உடனடியாக செயல்பட்ட இஸ்ரேல், தங்கள் குடிமக்களை சைரன்களை எழுப்பியும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தியது. தற்போது லட்சக்கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்பான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் எல்லைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. ஏவுகணை தாக்குதலுக்கு விரைவில் தக்க பதிலடி தரப்படும் எனவும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

