செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது: ஈரான் உத்தரவு
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது: ஈரான் உத்தரவு
ADDED : மே 22, 2026 07:27 AM

டெஹ்ரான்: நாட்டின் ஆயுதத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
ஈரான் மீது உடனடியாக கடுமையான ராணுவ தாக்குதலை தொடுத்து, அதன் அணு ஆயுதக் கனவை தகர்க்க வேண்டும் என்பதில் நெதன்யாகு உறுதியாக உள்ளார். ஆனால் டிரம்போ, துாதரக ரீதியிலான பேச்சுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாம் என்ற தொனியில் காய் நகர்த்தி வருகிறார். சமீபத்தில் கூட, வளைகுடா நாடுகளின் கோரிக்கையை ஏற்று, ஈரான் மீதான ஒரு திட்டமிடப்பட்ட ராணுவ தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.
இந்த சூழலில் நாட்டின் ஆயுதத் தரத்தை மேம்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என ஈரான் ஆட்சியாளர் மொஜ்தபா உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.மொஜ்தபா கமேனியின் இந்த உத்தரவு, அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தக்கூடும்.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் சிக்கலை ஏற்படுத்தும். இதற்கிடையே அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான, ஈரானிடம் உள்ள அதிக அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு ஈரானை விட்டு வெளியே அனுப்பப்படும்.
எந்தவொரு அமைதி ஒப்பந்தத்திலும் இது தொடர்பான ஒரு நிபந்தனை இடம்பெற வேண்டும் என டிரம்ப் இஸ்ரேலுக்கு உறுதியளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரானிலிருந்து செறிவூட்டப்பட்ட யுரேனியம் அகற்றப்படும் வரையிலும், பாலிஸ்டிக் ஏவுகணைத் திறன்கள் முழுமையாக அழிக்கப்படும் வரையிலும், இந்தப் போர் முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பிடிவாதமாக இருக்கிறார்.
இந்த சூழலில் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அணு குண்டு தயாரிக்க முயல்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ஈரான் நீண்ட காலமாக மறுத்து வருகிறது. ஆனால், ஈரான் மீது தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக அதிபர் டிரம்ப் மீண்டும் மீண்டும் விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
