தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/டிரம்பைக் கொலை செய்வதற்கான ஈரான் சதித்திட்டம்; திடுக் தகவல்

டிரம்பைக் கொலை செய்வதற்கான ஈரான் சதித்திட்டம்; திடுக் தகவல்

டிரம்பைக் கொலை செய்வதற்கான ஈரான் சதித்திட்டம்; திடுக் தகவல்

3


ADDED : ஜூலை 10, 2026 10:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 10:49 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கொலை செய்வதற்காக ஈரான் சதித்திட்டம் தீட்டி வருவதாக புதிய உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை டிரம்ப் ரத்து செய்ததைத் தொடர்ந்து, தான் ஈரானின் 'நம்பர் 1 இலக்கு' என்று அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் அமெரிக்கத் தாக்குதலில் ஈரான் ராணுவத் தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப் பழிவாங்க டிரம்ப்பைத் தீர்த்துக்கட்ட ஈரான் நீண்ட நாட்களாகத் திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை படுகொலை செய்வதற்கான ஈரானின் புதிய சதி திட்டம் ஒன்றை தங்களின் உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் அமெரிக்காவிற்கு ரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் டிரம்ப் பங்கேற்றபோது இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ளது.

சமீபத்தில் மறைந்த ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வலத்தின் போது, அமெரிக்காவுக்கு மரணம் என்றும், நாங்கள் டிரம்ப்பைக் கொல்வோம் என்ற பேனர்களுடனும் ஈரான் மக்கள் முழக்கமிட்டனர். இதற்கிடையே, ''ஈரானின் கொலைப் பட்டியலில் நான் முதலிடத்தில் இருக்கிறேன்.

இன்று காலை உளவுத்துறை தகவல்களைப் பார்த்தேன். அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிரோடு இருக்கிறேன், ஆனால் இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்று தெரியவில்லை' என டிரம்ப் நிருபர்களிடம் கூறியது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us