தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்

 ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்

 ஈரான் உளவு பிரிவு தலைவர் தாக்குதலில் கொல்லப்பட்டார்


ADDED : ஏப் 07, 2026 07:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 07, 2026 07:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் உளவு பிரிவு தலைவர் மஜித் காடேமி கொல்லப்பட்டார்.

மேற்காசிய நாடான ஈரான் மீது, கடந்த 35 நாட்களுக்கும் மேலாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து போர் நடத்தி வருகின்றன.

இப்போரில், ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ராணுவத்தின் உயரதிகாரிகள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் உள்ள கட்டளை மையங்களை குறி வைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதில், ஐ.ஆர்.ஜி.சி., எனப்படும் ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் உளவு பிரிவு தலைவர் மஜித் காடேமி கொல்லப்பட்டார். ஆனால், அவர் எங்கு இறந்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியிடப் படவில்லை.

ஈரானின் உளவு அமைப்பில் மிகவும் சக்திவாய்ந்த நபராக கருதப்படும் காடேமி, உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் உளவு எதிர்ப்பு நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியவர்.

கடந்தாண்டு, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய 12 நாட்கள் போரில் கொல்லப்பட்ட ஜெனரல் முகமது காசெமிக்கு பதிலாக, மஜித் காடேமி பொறுப்பேற்று பணியாற்றியவர்.

படைத்தலைவர் பலி இஸ்ரேல் நேற்று காலை நடத்திய தாக்குதல்களில், ஐ.ஆர்.ஜி.சி.,யின் வெளிநாட்டுப் பிரிவான கட்ஸ் படையின் முக்கிய தலைவரான யஸ்தான் மிர் என்பவரும் கொல்லப் பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us