அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒருங்கிணைக்கும் ஈரான்
அமெரிக்காவுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒருங்கிணைக்கும் ஈரான்
ADDED : ஆக 30, 2026 07:47 PM

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக வளைகுடா நாடுகளில் உள்ள முஸ்லிம் நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈரான் இறங்கியுள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் துவங்கி நேற்று முன்தினத்துடன் (ஆக.,28) 6 மாதங்கள் நிறைவடைந்து விட்டன. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கதார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இருந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.
போரை முடிக்க முடியாமல் தடுமாறி வரும் அமெரிக்காவின் செயல்பாடுகளின் மீது வளைகுடா நாடுகளுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், சீனா, ரஷ்யா மற்றும் புதிய பிராந்தியங்களின் ஒப்பந்தங்களை நோக்கி நகரத் துவங்கி விட்டன.
இந்த நிலையில், தங்களின் உண்மையான எதிரியான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஒருங்கிணையுமாறு வளைகுடா நாடுகளுக்கு ஈரான் மதகுரு முஜ்தபா கமேனி அழைப்பு விடுத்துள்ளார்.
போர் துவங்கியது முதல் பொதுவெளியில் தோன்றாத முஜ்தபா கமேனி, இந்த முறையும் வளைகுடா நாடுகளுக்கு கடிதம் மட்டுமே எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'முஸ்லிம் நாடுகளின் பிரச்னைகளுக்கு நட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மூலமே தீர்வு காண முடியும். முஸ்லிம்களிடையே பிளவை ஏற்படுத்துபவர்கள் எதிரிகளின் நோக்கத்திற்கே சேவை செய்கிறார்கள்,' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, ஈரான் மக்கள் எந்தவித வேறுபாடுகளையும் அனுமதிக்காமல் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும், சமூக ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயலையும் செய்யக் கூடாது என்று சொந்த நாட்டு மக்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
