sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

/

ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

8


ADDED : பிப் 28, 2026 01:34 PM

Google News

8

ADDED : பிப் 28, 2026 01:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: 'ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம்' என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், 'அந்நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி உள்ளதாக' அறிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர், வான்வழித் தாக்குதலை முழு வீச்சில் தொடங்கியுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் அளித்த பேட்டி:

ஈரான் அச்சுறுத்தலை முறியடிப்போம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்கி உள்ளது. அந்த நாடு அணு ஆயுத வலிமை பெறுவதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அந்த நாடு அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஏவுகணைகளை உருவாக்க வேலை செய்து வருகிறது.

இதனால் நாங்கள் பெரிய போர் நடவடிக்கைகளை தொடங்கி இருக்கிறோம். ஈரான் ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் நோக்கம். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானில் நடந்து வரும் வான்வழி தாக்குதலில் அமெரிக்காவின் பங்கை அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us