UPDATED : டிச 08, 2024 10:30 PM
ADDED : டிச 08, 2024 06:27 PM

டெஹ்ரான்: சிரியாவில் இருந்து தப்பியோடிய அதிபர் பஷர் அல் ஆசாத்திற்கு நெருக்கமான நாடான ஈரானின் தூதரகம், டமாஸ்கஸ் நகரில் சூறையாடப்பட்டது.
சிரியாவை ஆட்சி செய்த பஷர் அல் ஆசாத், ஈரானுடன் நெருங்கிய உறவை கொண்டு இருந்தார். சிரியாவில் போராடிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஈரான் பெரிதும் உதவி வந்தது. இந்நிலையில், சிரியாவில் இருந்து பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியததைத் தொடர்ந்து ஈரான் மீது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களின் கோபம் திரும்பி உள்ளது.
பஷர் அல் ஆசாத் தப்பி ஓடியது தெரிந்ததும், டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரான் தூதரகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டு சூறையாடினர். கைகளில் கிடைத்த பொருட்கள் அனைத்தையும் டிரக்கில் ஏற்றி கொண்டு சென்றனர். மேலும், அங்கு இருந்த ஈரானிய தலைவர்கள் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் நஸ்ருல்லா புகைப்படங்களை கிழித்து எறிந்தனர்.