sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

/

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் உயிரிழப்பு

4


ADDED : மார் 18, 2026 05:02 PM

Google News

4

ADDED : மார் 18, 2026 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்றைய நாளில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விமானப்படை தாக்குதலில் ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டுள்ளார்.அவர்களைவேட்டையாடுவது தொடரும். ஈரானின் மூத்த அதிகாரிகளை குறிவைத்து கொல்லும்படி இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரதமர் நெதன்யாகு அனுமதி வழங்கி உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், இஸ்மாயில் கதீப் கொல்லப்பட்டதை ஈரான் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இது ஊர்ஜிதமானால், கடந்த இரண்டு நாட்களில் உயிரிழக்கும் 3வது மூத்த அதிகாரி இவர் ஆவார். கடந்த இரண்டு நாட்களில் ஈரானின் பஸ்ஜி படையின் தலைவரான சுலைமானியும், தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவர் அலி லரிஜானியும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போர் துவங்கிய முதல் நாளிலேயே ஈரானின் ஆட்சியாளராக இருந்த கமேனி கொல்லப்பட்டார்.

தற்போது உயிரிழந்த இஸ்மாயில் கதீப், ஈரானின் நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைச்சகங்களில் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். ஈரான் - ஈராக் இடையிலான போரின்போது புரட்சிகர படையில் பணியாற்றினார். போரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us