தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம்; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!

இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம்; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!

இஸ்ரேல்- ஈரான் போர் பதற்றம்; கச்சா எண்ணெய் விலை உயர்கிறது!


ADDED : அக் 02, 2024 07:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2024 07:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: 'ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி மிக பெரிய தவறை செய்துள்ளது. இதற்கு பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஈரான் 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி நேற்று இரவு தாக்குதல் நடத்தியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா மரணத்திற்கு பழிவாங்கவே இந்த தாக்குதலை துவங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. இதற்கு பதில் அளித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியருப்பதாவது:

ஈரான் பெரும் தவறை செய்து விட்டது. தவறுக்கான விலையை ஈரான் கொடுத்தே ஆக வேண்டும். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு சிறப்பாக இருந்ததால், ஈரான் முயற்சி தோல்வி அடைந்தது. இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இது குறித்து, சமூகவலைதளத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் மீதான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை ஆஸ்திரேலியா கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது: மத்திய கிழக்கு நாடுகளை ஈரான் சீர்குலைக்கிறது. இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்கா வேடிக்கை பார்க்காது என்றார்.

தூதரகம் எச்சரிக்கை

இஸ்ரேலில் இந்திய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இஸ்ரேல் அரசு சொல்லும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுங்கள். 24 மணி நேர உதவி எண்களை 972-547520711, 972-543278392 தொடர்பு கொள்ளலாம் என இந்திய தூதரகம் அறிவித்தது. இஸ்ரேல் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது.

ஈரான் ஏவுகணை தாக்குதலை துவக்கிய உடனேயே மேற்கத்திய நாடுகளின் எண்ணை சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை மூன்று சதவீதம் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் விலை மேலும் அதிகரிக்கவே வாய்ப்பு அதிகம் என தகவல்கள் வெளியாகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us