தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/உலகம்/ஈரானின் அணு ஆயுதங்கள் அழிப்பு: டிரம்ப்

ஈரானின் அணு ஆயுதங்கள் அழிப்பு: டிரம்ப்

ஈரானின் அணு ஆயுதங்கள் அழிப்பு: டிரம்ப்


UPDATED : மார் 03, 2026 01:06 PM

ADDED : மார் 02, 2026 11:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 03, 2026 01:06 PM ADDED : மார் 02, 2026 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:'' ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் அணு ஆயுதங்கள் அழிக்கப்பட்டு உள்ளது,'' என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரான் மீதான தாக்குதல் தொடர்பாக வெள்ளை மாளிகையில் நிருபர்களை சந்தித்த டிரம்ப் கூறியதாவது: அணுஆயுத கட்டமைப்புகளை மீண்டும் ஏற்படுத்தக்கூடாது என ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்தோம். ஆனால், அவர்கள் அதனை புறக்கணித்து, அணு ஆயுதங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஐரோப்பாவையும், வெளிநாடுகளில் அமெரிக்கா தளங்களை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பெற்று இருந்தனர். விரைவில், அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் அவர்களுக்கு கிடைத்து இருக்கும். தீய ஆட்சியில் ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக தாக்குதல் நடத்துவதற்கும் அமெரிக்காவுக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு. அதனை செய்து கொண்டு இருக்கிறோம். அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக ஈரான் மாறியது. ஈரான் அணுஆயுத திட்டங்களை அழித்துவிட்டோம். பயங்கரவாதிகளுக்கு மிகப்பெரிய ஆதரவாளராக ஈரான் விளங்கியது.

ஈரானுக்கு எதிரான போரில் எங்களின் கணிப்புகளை விட அமெரிக்கா முன்னேறி உள்ளது. 4 அல்லது 5 வாரங்களில் போர் முடியும் என திட்டமிட்டோம். அதனையும் தாண்டி போர் நீடித்தால் அதனை செய்யும் வலிமை உள்ளது. அதனை செய்வோம். எங்களின் நோக்கம் தெளிவாகஉள்ளது. முதலில் ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை அழிக்க வேண்டியது. அதனை செய்துவிட்டோம். அடுத்தது அவர்களின் கடற்படையை அழிக்க வேண்டியது. ஏற்கனவே 10 கப்பல்களை தாக்கிவிட்டோம். அவை தற்போது கடலின் அடிப்பகுதியில் உள்ளன. அணு ஆயுதங்களை பெற முடியாத நிலையை இந்த தாக்குதல் ஏற்படுத்தி உள்ளது. ஈரானிய ஆட்சியாளர்கள் எல்லைகளுக்கு வெளியே ஆயுதம் ஏந்தவோ நிதி அளிக்கவோ முடியாத நிலை ஏற்படும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us