sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு

/

ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு

ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு

ஈரான் ஆட்சியாளர் கமேனி மரணம்; 40 நாட்கள் துக்கம் அறிவிப்பு

74


UPDATED : மார் 02, 2026 12:33 AM

ADDED : மார் 01, 2026 06:04 AM

Google News

74

UPDATED : மார் 02, 2026 12:33 AM ADDED : மார் 01, 2026 06:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நியூயார்க்: ஈரான் ஆட்சியாளர் கமேனி போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதை முதலில் மறுத்த ஈரான், பிறகு ஒப்புக் கொண்டுள்ளது. கமேனி மறைவுக்கு 40 நாள் அரசு முறை துக்கம் அறிவித்துள்ளது.



ஈரான் ஆட்சியாளரும் மதகுருவுமான கமேனி வசிக்கும் மாளிகை மீது நேற்று அமெரிக்க ராணுவமும் இஸ்ரேல் ராணுவமும் குண்டு மழை பொழிந்தன. அவர் இருக்கும் இடத்தை துல்லியமாக அறிந்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர் தற்போது அறிவித்தனர்.கமேனி கொல்லப்பட்டதை முதலில் மறுத்த ஈரான், பிறகு அதை ஒப்புக் கொண்டுள்ளது.

அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கை: வரலாற்றின் மிகவும் மோசமான தீய மனிதரான கமேனி கொல்லப்பட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல; கமேனியின் ரத்த வெறி பிடித்த கும்பலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள், பல்வேறு நாட்டு மக்களுக்கு கிடைத்த நீதியாகும்.

அவரால் எங்களது துல்லியமான தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

தங்கள் நாட்டை கையில் எடுத்துக் கொள்வதற்கு ஈரான் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வாய்ப்பு இது.

ஈரான் நாட்டின் ராணுவம், போலீசார், சிறப்பு காவல் படையினர் என பலரும் எங்களிடம் இருந்து பாதுகாப்பை எதிர்நோக்கி உள்ளனர் என்று தகவல் வந்துள்ளது. அவர்கள் ஈரானிய தேசபக்தர்களுடன் இணைந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.

மீண்டும் தங்கள் நாட்டை பழைய பெருமைக்கு கொண்டு வர முன் வருவார்கள் என்றும் நம்புகிறேன். அதற்கான நடவடிக்கை விரைவில் துவங்கும்.

கமேனி கொல்லப்பட்டாலும் ஈரான் மீதான துல்லிய தாக்குதல் இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும். உலகத்துக்கும் மத்திய கிழக்கு பகுதிக்கும் அமைதியை கொண்டு வரும் எங்கள் நோக்கம் நிறைவேறும் வரை இந்த தாக்குதல் தொடரும். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

துக்கம் அனுசரிப்பு

இஸ்ரேல், அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஆட்சியாளர் கமேனி மரணம் அடைந்தார் என்பதை ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்ட நிலையில், ஈரானில் 40 நாட்கள் பொது துக்கம் அனுசரிக்கப்படுகிறது. 7 நாட்கள் பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கமேனியின் மகள், மருமகன், பேரன் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீரில் போராட்டம்

ஷியா இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜம்மு காஷ்மீரில், ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.



அழுது கொண்டே செய்தி வாசிப்பு

மதகுருவும், ஆட்சியாளருமான கமேனி கொல்லப்பட்டதை அறிவித்த ஈரான் டிவி செய்தி வாசிப்பாளர், அழுது கொண்ட வாசித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அரசு சார்பிலான பிரஸ் டிவியில் செய்தி வாசித்த மரியம் அஸார்செஹர், நேரலை ஒளிபரப்பில் கண்ணீர் விட்டு அழுதார். ஐஆர்ஐஎன்என் என்ற இன்னொரு சேனலிலும் செய்தி வாசித்தவர், தேம்பி அழுது கொண்டே வாசித்தார்.



8 பேர் பலி

ஈரான் ஆட்சியாளர் கமேனி கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் போராட்டக்காரர்கள், கராச்சி நகரில் அமெரிக்க துணை துாதரகத்தை அடித்து நொறுக்கினர். நுாற்றுக்கணக்கான பேர், துாதரக கட்டடத்தில் புகுந்து ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.








      Dinamalar
      Follow us