தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ அணுசக்தி திறன்களை கைவிட ஈரான் உச்ச தலைவர் மறுப்பு

 அணுசக்தி திறன்களை கைவிட ஈரான் உச்ச தலைவர் மறுப்பு

 அணுசக்தி திறன்களை கைவிட ஈரான் உச்ச தலைவர் மறுப்பு


ADDED : மே 01, 2026 12:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2026 12:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துபாய்: ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்கள் தேசிய சொத்து என்றும், அவற்றை ஈரான் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்காது என்றும் ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி உறுதியாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மேற்காசிய நாடான ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்த புதிய ஒப்பந்தம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்து வரும் நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் உள்ள ஒன்பது கோடி பெருமைமிக்க மற்றும் கவுரவமான ஈரானியர்கள், நாட்டின் அடையாளம் சார்ந்த ஆன்மிக, மனித, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு திறன்கள் அனைத்தையும், நானோ தொழில்நுட்பம் மற்றும் பயோடெக்னாலஜி முதல் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்கள் வரை தேசிய சொத்துகளாக கருதுகின்றனர். நாட்டின் நிலம், நீர் மற்றும் வான்வெளியை எப்படி ஈரான் பாதுகாக்கிறதோ அதைப்போல இதையும் ஈரான் மக்கள் பாதுகாப்பர்.

பாரசீக வளைகுடா மற்றும் ஓமன் வளைகுடாவின் நீர்நிலைகளுக்கு அப்பால் உள்ள நம் அண்டை நாடுகளும், நாமும் ஒரு பொதுவான விதியை கடைப்பிடித்து வருகிறோம். ஆ யிரக்கணக்கான கி.மீ.,க்கு அப்பால் இருந்து பேராசையுடனும் தீய எண்ணத்துடனும் செயல்படும் வெளிநாட்டினருக்கு இங்கே இடமில்லை.

ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் பிடியில் இருக்கும் நிலையில், பாரசீக வளைகுடாவில் அமெரிக்கர்களுக்கு உரிய ஒரே இடம் அந்த நீரின் ஆழம் தான். கடவுளின் உதவி மற்றும் வலிமையால், பாரசீக வளை குடா பிராந்தியத்தின் எதிர்காலம் அமெரிக்கா இல்லாத எதிர்காலமாக இருக்கும். அது அதன் மக்களின் முன்னேற்றம், ஆறுதல் மற்றும் செழுமைக்கு சேவை செய்யும் ஒன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us