ADDED : ஆக 08, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லண்டன்: அயர்லாந்தில், கேரளாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுமி மீது இனவெறி தாக்குதல் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ஒரு பகுதியான அயர்லாந்தில், இந்திய வம்சாவளியினர் மீது இனவெறித் தாக்குதல்கள் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த அனுபா அச்சுதன் என்பவர் அங்கு நர்சாக பணிபுரிந்து வருகிறார். கடந்த எட்டு ஆண்டாக அங்கு குடும்பத்துடன் வசித்து வரும் அனுபா, அயர்லாந்து குடியுரிமையும் பெற்றிருக்கிறார்.
வாட்டர்போர்டு நகரில் உள்ள அனுபாவின் வீட்டின் வெளியே, 6 வயது மகள் நியா நவீன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 12 முதல் 14 வயதுடைய சிறுவர்கள் சிலர் அவரை தாக்கியுள்ளனர். இனரீதியாகவும் கண்டபடி பேசியுள்ளனர்.