தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/கதிரியக்க குண்டுகளை வீசி டிரம்பை குறி வைக்கிறதா ஈரான்; பகீர் கிளப்பும் அமெரிக்க உளவுத்துறை

கதிரியக்க குண்டுகளை வீசி டிரம்பை குறி வைக்கிறதா ஈரான்; பகீர் கிளப்பும் அமெரிக்க உளவுத்துறை

கதிரியக்க குண்டுகளை வீசி டிரம்பை குறி வைக்கிறதா ஈரான்; பகீர் கிளப்பும் அமெரிக்க உளவுத்துறை

1


ADDED : நவ 17, 2026 05:48 PM

Follow on GoogleFavourite on Google

1

ADDED : நவ 17, 2026 05:48 PM


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அமெரிக்கா,ஈரான் இடையேயான போர் பதற்றம் ஓயவில்லை. முன்பை விட நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பதற்றம் நீடித்து வரும் அதே வேளையில், டிரம்பை கொல்ல ஈரான் சதித்திட்டம் தீட்டி இருப்பதாக அமெரிக்கா உளவு அமைப்புகள் புதிய தகவல்களை வெளியிட்டு இருக்கின்றன.

அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயரதிகாரிகளை கதிரியக்க குண்டுகளை வீசி கொல்ல ஈரான் திட்டமிட்டுள்ளது என்ற விவரங்கள் வெளிவந்துள்ளன. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்புகள், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுக்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அந்த கடிதத்தில் ஈரான் திட்டங்கள் பற்றி விரிவாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

வாஷிங்டனில் கதிரியக்க ஆயுதங்கள் அல்லது வெடிகுண்டுகளை வீசி ஈரான் தாக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாக்குதலில் இருந்து தப்பிக்கும் வகையில் மாற்று வழிகளை வழங்கும் முயற்சிகளில் அமெரிக்க உளவு அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் லாரன் பிஸ் கூறியதாவது;

இங்குள்ள நிலைமையை நாங்கள் தொடர்ந்து உன்னிப்புடன் கவனித்து வருகிறோம். சாத்தியப்படும் என்று கணித்துள்ள அனைத்து அச்சுறுத்தல்களையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us