sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரானை தாக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் தருகிறதா சவுதி?

/

ஈரானை தாக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் தருகிறதா சவுதி?

ஈரானை தாக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் தருகிறதா சவுதி?

ஈரானை தாக்க பாகிஸ்தானுக்கு அழுத்தம் தருகிறதா சவுதி?

11


ADDED : மார் 22, 2026 10:43 PM

Google News

11

ADDED : மார் 22, 2026 10:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரியாத்: சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி நிலையங்களை ஈரான் தாக்கி வரும் நிலையில், 2025 பாதுகாப்பு ஒப்பந்தத்தை நினைவூட்டி ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவுதி அழுத்தம் தந்துள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவும், நம் அண்டை நாடான பாகிஸ்தானும் நட்பு நாடுகள். இரு நாடுகளிடையே கடந்த ஆண்டு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றன் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மற்றொரு நாட்டின் மீதான தாக்குதலாக கருதப்படும். இந்நிலையில், சவுதி மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு ஒப்பந்தத்தை நினைவூட்டி, ஈரானுக்கு எதிராக பாகிஸ்தான் செயல்பட வேண்டும் என சவுதி அரசு விரும்புகிறது. இந்த கருத்தை அரசின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் கனடா செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறினர். இது பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் எண்ணிக்கை 3 கோடிக்கும் மேல்.

ஈரானை பாகிஸ்தான் தாக்கினால் உள்நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கும். ஏற்கனவே பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பொருளாதாரம் மேலும் மோசமடையும். ஈரானுடன் 900 கி.மீ., எல்லையை பாகிஸ்தான் பகிர்ந்துள்ளது. எனவே பதிலடி தாக்குதல் அபாயம் உள்ளது. இதன் காரணமாக ஒப்பந்தத்தை மறந்து விட்டு பாகிஸ்தான் நடப்பதை வேடிக்கை மட்டும் பார்க்கிறது.






      Dinamalar
      Follow us