ஹமாஸின் முக்கிய நபரை கொன்று விட்டோம்; இஸ்ரேல் அறிவிப்பு
ஹமாஸின் முக்கிய நபரை கொன்று விட்டோம்; இஸ்ரேல் அறிவிப்பு
ADDED : ஆக 31, 2025 09:42 PM

ஜெருசலேம்: ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா என்பவன் கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் இருந்து தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவின் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிய நிலையில், எஞ்சிய பகுதிகளிலும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
காசா மீது இஸ்ரேல் படைகள், கடந்த சில தினங்களாக தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த பல முக்கிய நபர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒபெய்தா என்பவன் கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி 1200 பேரைக் கொன்று விட்டு, 251 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்ற போது, ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் கொன்று வருகிறது. அந்த வகையில், தற்போது, ஒபெய்டா கொல்லப்பட்டுள்ளான்.
இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களிடம் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியதாவது: 'ஹமாஸ் செய்தித் தொடர்பாக ஓபெய்டாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது. அவர் கொல்லப்பட்டாரா என்பது தெரியவில்லை. அதேவேளையில், ஹமாஸ் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை,' என்று கூறினார்.