ADDED : செப் 09, 2025 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் நேற்று சில இடங்களில், ஏவுகணை தாக்குதல் நடந்தன. ஹமாஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கர வாதிகளுக்கும் இடையேயான போர் இரண்டு ஆண்டுகளை எட்டியுள்ளது. காசா பகுதியில் தன் தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அண்டை நாடான கத்தாரின் தோஹாவில் நேற்று சில இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.
பதுங்கியுள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் சில முக்கியத் தலைவர்களை குறி வைத்து இந்த வான்வழி தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. ஆனால், இந்த குண்டுவெடிப்புகளால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.