தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ ஐ.நா., தலைமையகத்தை புல்டோசரால் இடிக்கும் இஸ்ரேல்

 ஐ.நா., தலைமையகத்தை புல்டோசரால் இடிக்கும் இஸ்ரேல்

 ஐ.நா., தலைமையகத்தை புல்டோசரால் இடிக்கும் இஸ்ரேல்


ADDED : ஜன 21, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜெருசலேம்: இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் அமைப்பின் தலைமையகத்தை புல்டோசர்கள் மூலம் இடிக்கத் துவங்கியுள்ளது.

மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023ல் போர் துவங்கியது. இரண்டு ஆண்டுகள் நடந்த போர், கடந்தாண்டு அக்டோபரில் நிறுத்தப்பட்டுள்ளது.

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு உதவி வழங்கும் மனிதநேய அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐ.நா., நிவாரண மற்றும் மீட்புப் பணிகள் அமைப்பின் தலைமையக வளாகத்திற்குள் நுழைந்து, புல்டோசர்கள் மூலம் கட்டடங்களை இடிக்கத் துவங்கியுள்ளது.

காசா, மேற்கு கரை, கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 25 லட்சம் பாலஸ்தீனிய அகதிகளுக்கு உணவு, சுகாதாரம், கல்வி போன்ற சேவைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.

ஐ.நா., நிவாரண அமைப்பு, ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவுவதாக குற்றஞ்சாட்டி இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us