பிணை கைதிகள் அனைவரும் மீட்பு இஸ்ரேல் கடிகாரம் நிறுத்தப்பட்டது
பிணை கைதிகள் அனைவரும் மீட்பு இஸ்ரேல் கடிகாரம் நிறுத்தப்பட்டது
ADDED : ஜன 28, 2026 04:52 AM

டெ: ல் அவிவ்: ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி, கடத்திச் சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் வைக்கப்பட்டிருந்த அடையாள கடிகாரம், 844 நாட்களுக்கு பின் நிறுத்தப்பட்டது.
மேற்காசி ய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023 அக்டோபர் 7ம் தேதி தாக்குதல் நடத்தியது.
மேலும், குழந்தைகள், முதியோர் மற்றும் இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் உட்பட, 251 பேரை பிணைக் கைதிகளாக காசாவுக்குள் கடத்திச் சென்றனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து, ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிகாரப்பூர்வ போரை துவக்கியது. இரண்டு ஆண்டுகளாக இரு தரப்பிடையே நடந்து வந்த போர், அமெரிக்கா முன்மொழிந்த சமாதான திட்டத்தின் கீழ், கடந்தாண்டு அக்டோ பரில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இரு தரப்பு ஒப்பந்தத்தின் கீழ் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட ஒப்புக் கொள்ளப்பட்டன. இதையடுத்து, பரஸ்பரம் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
பிணைக் கைதிகளை விடுவிக்கக் கோரி, அவர்களுடைய குடும்பத்தினர், டெல் அவிவ் நகரில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மேலும், பிணைக் கைதிகள் கடத்திச் செல்லப்பட்டதை குறிக்கும் வகையில், டெல் அவிவ் நகரில் பிணைக் கைதிகள் சதுக்கத்தில் ஒரு மின்னணு கடிகாரத்தை நிறுவினர்.
பிணைக் கைதிகளில் கடைசி நபரா க கருதப்படும் மாஸ்டர் சார்ஜென்ட் ரான் க்விலி என்பவரின் உடல் இஸ்ரேலிடம் நேற்று முன்தினம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, கடிகாரம் துவங்கி சரியாக 844 நாட்களுக்குப் பின், நேற்று நிறுத்தப்பட்டது.
