பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாக சம்பவம்: கேரளாவில் இஸ்ரேல் தம்பதிக்கு அவமதிப்பு
பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு ஆதரவாக சம்பவம்: கேரளாவில் இஸ்ரேல் தம்பதிக்கு அவமதிப்பு
UPDATED : நவ 14, 2024 01:34 PM
ADDED : நவ 14, 2024 01:33 PM

திருவனந்தபுரம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த தம்பதியினரை கேரளாவில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் நுழைய விடாமல் வெளியேற்றினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுற்றுலாத்தளமான தேக்கடியில் பல நாட்டை சேர்ந்தவர்கள் வந்து செல்வர். இங்கு வழக்கத்திற்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்தது. காஷ்மீரை சேர்ந்த 2 பேர் தேக்கடியில் கைவினை பொருள் விற்கும் கடை நடத்தி வருகின்றனர் . இங்கு இஸ்ரேல் தம்பதியினர் ஆர்வமாக ஷாப்பிங் செய்ய வந்தனர். ஆனால் ' நீங்கள் எந்த நாட்டவர்கள் என கடைக்காரர்கள் விசாரித்தனர். இஸ்ரேல் என தெரிந்ததும் கடைக்குள் வர வேண்டாம், பாலஸ்தீன முஸ்லிம்களை சிரமப்படுத்துகிறீர்கள் , நாங்கள் அவரது ஆதரவாளர்கள் என கூறினர்.
இதனை கேட்ட இஸ்ரேல் தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
' நாங்கள் பொருட்கள் வாங்க தான் வந்திருக்கிறோம், ஹிந்து, கிறிஸ்து, இஸ்லாமியர், என வேறுபாடு நினைப்பதில்லை. இந்தியர்கள் போல் நடந்து கொள்ளுங்கள், இந்திய கலாசாரத்தோடு நடந்து கொள்ளுங்கள், இது இந்தியாவில் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. ' என காரசார விவாதம் செய்தனர். தொடர்ந்து அங்கு கூடிய நபர்களும் இஸ்ரேல் தம்பதியினருக்கு ஆதரவு அளித்து குரல் கொடுத்தனர். இதனைய டுத்து கடைக்காரர்கள் மன்னிப்பு கோரினர். பின்னர் ஆதரவு அளித்த பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்து விடை பெற்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
சவுதியில் கேரள தம்பதி மர்ம மரணம்

சவுதி அரேபியாவில் கேரள தம்பதியினர் மர்ம முறையில் இறந்து கிடந்தனர். உடல்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். கொல்லம் மாவட்டம் கடக்கல்லை சேர்ந்த சரத் 40, இவரது மனைவி பிரீத்தி 32. சரத் சவுதியில் 2 வருடங்களாக பிளம்பராக பணியாற்றி வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியை சவுதி அழைத்து வந்துள்ளார். உனைஷா என்ற பகுதியில் வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தனர். பொருளாதார ரீதியில் ஏதும் பாதிக்கப்பட்டார்களா அல்லது கணவன் மனைவி இடையே தகராறு ஏதும் இருந்ததா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

