இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் புதிய குடியிருப்புகள் கட்ட முடிவு
ADDED : டிச 22, 2025 12:09 AM
டெல்: அவிவ்:: பாலஸ்தீனத்தின் மேற்கு கரை பகுதியில்: ல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.: மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே இரு ஆண்டுகளாக போர் நடந்து வந்தது. அமெரிக்காவின் மத்தியஸ்தம் காரணமாக தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக கூறப்படும் மேற்கு கரையில், இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதியில் 19 குடியிருப்புகளை கட்ட, அந்நாட்டு அரசு நேற்று ஒப்புதல் அளித்தது.
இதன் வாயிலாக கடந்த இரு ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட புதிய குடியிருப்புகளின் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய ஒப்புதலுக்கு பின், அந்தப் பகுதியில் உள்ள யூத குடியிருப்புகள் எண்ணிக்கை, 210 ஆக உயர்ந்துள்ளன.
இஸ்ரேலின் இந்த முடிவுக்கு ஐ.நா.,வும் பல்வேறு நாடுகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சர்வதேச சட்டத்தின்படி, ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்புகளை உருவாக்குவது சட்ட விரோதமானது என கருத்து தெரிவித்துள்ளன. ஆனால், வரலாற்று ரீதியில் தங்களுக்கு உரிமையுள்ள இடங்கள் என இஸ்ரேல் கூறி வருகிறது.

