sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்

/

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தல்

12


ADDED : மார் 20, 2026 08:34 AM

Google News

12

ADDED : மார் 20, 2026 08:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜெருசலேம்: ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை உருவாக்க வேண்டும். இது நிச்சயமாக சாத்தியமாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது: அதிபர் டிரம்பின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் அசலூயே எரிவாயு வளாகம் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் இடைநிறுத்தியுள்ளது. மேலும், ஈரானின் ஏவுகணை, ஆளில்லா விமானம் மற்றும் அணுசக்தி தொடர்பான உள்கட்டமைப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

ஹார்முஸ் ஜலசந்திக்கு மாற்றுப்பாதை உருவாக்க வேண்டும். அரேபியத் தீபகற்பம் வழியாக இஸ்ரேலின் மத்தியதரைக் கடல் துறைமுகம் வரை குழாய் அமைத்தால் போதும், இதன்மூலம் எண்ணெய் மற்றும் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி பெற்று கொள்ளலாம்.

இது நிச்சயமாக சாத்தியம். அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இருபது நாள் கூட்டு நடவடிக்கைகளுக்குப் பிறகு, யுரேனியத்தைச் செறிவூட்டும் அல்லது பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்கும் ஈரானின் திறன் முடக்கப்பட்டுள்ளது

மக்கள் நினைப்பதை விட இந்தப் போர் மிக வேகமாக முடிவுக்கு வரும். ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதையும், அதை பூமிக்கடியில் புதைப்பதையும், அமெரிக்காவை நோக்கி அணு ஆயுத ஏவுகணைகளை ஏவுவதையும் தடுப்பதன் அவசியத்தைப் பற்றி அதிபர் டிரம்புக்கு நான் விளக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

அவர் அதைப் புரிந்துகொண்டார். அதை அவர் எனக்கு விளக்கினார். நான் அவருக்கு அதை விளக்கவில்லை. இந்தப் பேரழிவு தரும் நிகழ்வைத் தவிர்ப்பதற்கு நமது கூட்டாண்மை மட்டுமே ஒரே வழியாகும். இவ்வாறு பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.






      Dinamalar
      Follow us