ஹமாஸ் படையினரின் 2 நிலத்தடி சுரங்கப் பாதையை சுக்கு நூறாக்கியது இஸ்ரேல்; வீடியோ வெளியீடு
ஹமாஸ் படையினரின் 2 நிலத்தடி சுரங்கப் பாதையை சுக்கு நூறாக்கியது இஸ்ரேல்; வீடியோ வெளியீடு
ADDED : ஆக 26, 2025 10:24 PM

ஜெருசலேம்: காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அகற்றினர். அந்த சுரங்கப்பாதையில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இஸ்ரேல்- ஹமாஸ் படையினர் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள இஸ்ரேல் பிணைக்கைதிகளை வீட்டுக்கு திரும்பி அழைத்து வரும் வரை போர் தொடரும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இந்த சூழலில் காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப்பாதையை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அகற்றி உள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை பகிர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: எங்கள் பாதுகாப்பு படையினர் காசாவில் ஹமாஸ் படையினரின் இரண்டு நிலத்தடி சுரங்கப் பாதைகளை அகற்றினர். ஒன்றில், ஆயுதங்கள், உணவு மற்றும் குடியிருப்புகள் கூட இருந்தன.
அது கான்கிரீட்டால் நிரந்தரமாக மூடப்பட்டிருந்தது. மற்றொன்று நூற்றுக்கணக்கான மீட்டர் தொலைவில் நிலத்தடியில் இருந்த சுரங்கப்பாதை அப்புறப்படுத்தப்பட்டது இந்த நடவடிக்கையின் போது, 10க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டனர். பயங்கரவாத உள்கட்டமைப்பு அனைத்தும் அகற்றப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.