‛‛அவர்கள் கதையை முடித்துவிடுங்க'' : சர்ச்சையை ஏற்படுத்திய நிக்கி ஹாலே
‛‛அவர்கள் கதையை முடித்துவிடுங்க'' : சர்ச்சையை ஏற்படுத்திய நிக்கி ஹாலே
ADDED : மே 29, 2024 07:00 PM

காசா: இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்நாட்டு ராணுவ ஏவுகணை ஒன்றில் ‛‛ அவர்கள் கதையை முடித்துவிடுங்க '' என கையெழுத்திடும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் படையினர் இடையே கடந்தாண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது. இதையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது இஸ்ரேல் ராணுவம். இதுவரை 36 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசு கட்சியைச் சேர்ந்த நிக்கிஹாலே 53 போட்டியிடுகிறார். இவர் சமீபத்தில் இஸ்ரேல் சென்றார். அங்கு ராணுவ தளவாடங்களை பார்வையிட்டு அங்குள்ள ஏவுகணை ஒன்றில் ‛‛ அவர்கள் கதையை முடித்துவிடுங்கள்'' என இஸ்ரேலுக்கு ஆதரவாக குறிப்பு எழுதி கையெழுத்திட்டார். இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.