ADDED : ஜூன் 16, 2025 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜெருசலேம்: இஸ்ரேல் நேற்று முன்தினம் ஈரானின் புஷேர் மாகாணம், கங்கனில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான் எண்ணெய் உற்பத்தியை பாதியாக குறைத்துள்ளது.
நாளொன்றுக்கு 15 முதல் 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஈரானில் இருந்து ஏற்றுமதியாகிறது. தற்போது நடந்து வரும் சண்டையால் இந்த ஏற்றுமதி பாதிக்கப்படும். இதை ஈடு செய்ய ஒபெக் எனப்படும் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
அதில் பிரச்னை ஏற்பட்டால் தற்போது கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 73 டாலராக இருப்பது 90 டாலர் வரை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இவ்வாறு உயர்ந்தால், உலகெங்கும் பெட்ரோல், டீசல் விலை உயரும்.