தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ இஸ்ரேல் -- லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு

 இஸ்ரேல் -- லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு

 இஸ்ரேல் -- லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு


ADDED : ஏப் 24, 2026 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2026 09:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாஷிங்டன்:இஸ்ரேல் - லெபனான் இடையிலான போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான இஸ்ரேல் - லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போர் தொடங்கிய நிலையில், கடந்த மார்ச் மாதம் ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கினர்.

இதனால் இஸ்ரேல் - ஹெஸ்பொல்லா மோதலில், லெபனானில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,300 பேர் பலியாகினர். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் அமெரிக்கா இருநாடுகளையும் அழைத்துப் பேசியது. கடந்த 1948ம் ஆண்டிற்குப் பிறகு இரு நாடுகளும் முதல்முறையாக நேரடி பேச்சு நடத்தின.

அதன்பிறகு 10 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அது காலாவதியாக உள்ள நிலையில், மீண்டும் வெள்ளை மாளிகையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், லெபனான் துாதர் நடா ஹமாதே முவாத் மற்றும் இஸ்ரேல் துாதர் யெச்​சி​யேல் லைட்டர் ஆகியோர் பேச்சு நடத்தினர்.

இந்தச் சந்திப்புக்கு பின் அதிபர் டிரம்ப் கூறியதாவது:

போர் நிறுத்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. லெபனானை ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்க அமெரிக்கா என்றும் துணை நிற்கும். இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், தன்னைத் தற்காத்துக் கொள்ள அந்த நாட்டுக்கு முழு உரிமை உண்டு. வரும் வாரங்களில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் லெபனான் அதிபர் ஜோசப் அவுன் ஆகியோரை சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன், என்றார்.

ஒருபுறம் அமைதிப் பேச்சு நடந்தாலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகள் இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 'நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் மதிக்க மாட்டோம், அது எங்களை கட்டுப்படுத்தாது' என, கூறி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us