அகதிகள் முகாமில் 14 பேர் பலி; லெபனானில் மீண்டும் வான்வழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல்
அகதிகள் முகாமில் 14 பேர் பலி; லெபனானில் மீண்டும் வான்வழி தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல்
ADDED : நவ 19, 2025 10:35 PM

சிடான் (லெபனான்); வான்வழி தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, தெற்கு லெபனானில் இஸ்ரேல் மீண்டும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல், லெபனான் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப்படை இடையே 2024ம் ஆண்டு போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர், சிடான் நகரத்தில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் கூறி உள்ளது.
இந் நிலையில், அங்கு செயல்பட்டு ஹமாஸ் இயக்கத்தின் பயிற்சி முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. அதன் பின்னர் தெற்கு லெபனானில் உள்ள பல கிராமங்களில் உள்ள இலக்குளை குறி வைத்து தாக்க போவதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
அங்குள்ள மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஷெஹூர், டெய்ர், கிபா ஆகிய கிராமங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்களை தொடங்கி இருக்கிறது. ஹமாஸ் எங்கு இருந்தாலும் தாக்குதல் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.
ஆனால், இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் முற்றிலும் நிராகரித்து உள்ளது. சிடான் நகரில் எந்த இடத்திலும் பயிற்சி முகாம் இல்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.

