ஈரான் மதத் தலைவர் கமனெிக்கு இஸ்ரேல் 12 மணிநேரம் கெடு
ஈரான் மதத் தலைவர் கமனெிக்கு இஸ்ரேல் 12 மணிநேரம் கெடு
ADDED : ஜூன் 24, 2025 01:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டெல்அவிவ்: கத்தார், சிரியா, ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் நேற்றிரவு(ஜூன் 23) ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் வெளியிட்ட ஆடியோவில் கூறியுள்ளதாவது:
ஈரான் மதத் தலைவர் அயதுல்லா கமனெி, அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் 12 மணி நேரத்தில் உடனே தப்பிச்செல்ல வேண்டும். ஈரான் மதத் தலைவர் தங்கள் பட்டியலில் இருக்கிறார். கடவுள் அவரை பாதுகாக்கட்டும். இவ்வாறு இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான சேவை ரத்து
இதற்கிடையே மேற்காசிய நாடுகளுக்கு செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஏர்இந்தியா ரத்து செய்துள்ளது.
இந்தியர்களை மீட்பதில் தாமதம்
கத்தாரில் ஈரான் நடத்திய தாக்குதலையடுத்து அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.