sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவியர் 51 பேர் பலி

/

ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவியர் 51 பேர் பலி

ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவியர் 51 பேர் பலி

ஈரான் பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்; மாணவியர் 51 பேர் பலி

1


UPDATED : பிப் 28, 2026 06:30 PM

ADDED : பிப் 28, 2026 05:04 PM

Google News

1

UPDATED : பிப் 28, 2026 06:30 PM ADDED : பிப் 28, 2026 05:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டெஹ்ரான்: தெற்கு ஈரானில் உள்ள பள்ளியில் இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் மாணவியர் 51 பேர் கொல்லப்பட்டனர்.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சரமாரியாக வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெஹ்ரானில் ஏராளமான கட்டடங்கள் தீப்பிடித்து எரிகின்றன. பல இடங்களில் குண்டுமழை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஈரான் அறிவித்துள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளியில் இஸ்ரேல் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தினர். பள்ளியில் வான்வழி தாக்குதலை இஸ்ரேல், அமெரிக்கா நடத்த தொடங்கியதும் அங்கிருந்த மாணவியர் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் மாணவியர் 51 பேர் உயிரிழந்து விட்டதாக, சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாணவியர் உயிரிழந்ததை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஈரானின் எதிர் ஏவுகணை தாக்குதலுக்கு மத்தியில் துபாய், சவுதியின் ரியாத்தில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டது. ஈராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தங்கள் வான்வெளியை மூடிவிட்டன. ஜோர்டானில் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்தன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகரில், ஒரு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us