இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் சதி : ஓபன்ஏஐ ‛‛பகீர் ''
இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் சதி : ஓபன்ஏஐ ‛‛பகீர் ''
UPDATED : ஜூன் 01, 2024 10:46 AM
ADDED : மே 31, 2024 08:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க இஸ்ரேல் நிறுவனம் முயற்சித்ததாக ,ஓபன்ஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் முன்னணி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனம் ஓபன்ஏஐ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இஸ்ரேலின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனம், இந்தியாவி்ல் நடைபெற்று வரும் பொதுத்தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்திட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்ததை பயன்படுத்த முயற்சித்தது.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக பிரசாரம் செய்யவும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியை பாராட்டி மக்களிடம் கருத்துருவை உருவாக்கிடவும் முயற்சித்தது. இவ்வாறு அதில் கூறியுள்ளது.