இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவன தலைவர்!
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; நூலிழையில் உயிர் தப்பினார் உலக சுகாதார நிறுவன தலைவர்!
UPDATED : டிச 27, 2024 10:03 PM
ADDED : டிச 27, 2024 08:18 AM

ஜெருசலேம்: ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம் நூலிழையில் உயிர் தப்பினார்.
காஸா மீது இஸ்ரேல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஏமன் தலைநகர் சனாவில், தினமும் 10 ஆயிரம் பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஏமன் தலைநகர் சனாவில் உள்ள விமான நிலையத்தில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது.
அப்போது, விமானத்தில் செல்வதற்காக, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ராஸ் அதனோம், விமான நிலையத்திற்கு வந்து இருந்தார். தாக்குதலில் இருந்து, நூலிழையில், டெட்ராஸ் அதனோம் உயிர் தப்பினார். இவர் இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தொலைவில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு, டெட்ராஸ் அதனோம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர், 'சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மதிக்க வேண்டும். மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்த கூடாது' என கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் தலைவராக, ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்ந்த டெட்ராஸ் அதனோம், 2017ல் பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.