ஊழல் வழக்கில் கோர்ட்டில் ஆஜரானார் இஸ்ரேல் பிரமதர் நெத்தன்யாகு
ஊழல் வழக்கில் கோர்ட்டில் ஆஜரானார் இஸ்ரேல் பிரமதர் நெத்தன்யாகு
ADDED : டிச 10, 2024 09:55 PM

ஜெருசலேம்: ஊழல் வழக்குகளில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகு, மாவட்ட கோர்ட்டில் ஆஜரானார்.
இஸ்ரேலின் பிரதமரக கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வரும் பெஞ்சமின் நெத்தன்யாகு மீது கடந்த 2019-ம் ஆண்டு லஞ்சம், நம்பிக்கை மோசடி செய்தது, தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்பட்டு அதற்கு கைமாறாக லஞ்சம் வாங்கியது உள்ளிட்ட 3 ஊழல்கள் வழக்குகள் பதியப்பட்டன.
கடந்தாண்டு விசாரணை துவங்கிய போது ஹமாஸ் அமைப்புக்கு எதிரான போர் துவங்கியதால், வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி கடந்த நவ. 24 அன்று நெத்தன் யாகு தரப்பு வழக்கறிஞர் குழுவினர் கோரிக்கையை ஏற்று 15 நாள்கள் நீதிமன்றம் தள்ளி வைத்தது. தற்போது போரில் தீவிரம் காட்டி வருவதால் மேலும் 15 நாள் தள்ளி வைக்குமாறு வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிரகரித்தது.
இந்நிலையில் பலத்த பாதுகாப்புடன் டெல்அவிவ் மாவட்ட நீதிமன்றத்தில் நெத்தன் யாகு ஆஜரானார். அவரிடம் ரகசிய அறையில் விசாரணை நடந்தது. பின்னர் வாரத்திற்கு 3 முறை நெத்தன் யாகு ஆஜராகி சாட்சியம் அளிக்க உத்தரவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஊழல் வழக்கில் சிறை தண்டனைக்குள்ளான முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமை பெறுவார். பதவி விலக வேண்டிய சூழல் நிலவும் என செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.