பெரும் தாக்குதல் நிச்சயம்: ஹவுதி பயங்கரவாத அமைப்பை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்
பெரும் தாக்குதல் நிச்சயம்: ஹவுதி பயங்கரவாத அமைப்பை எச்சரித்த இஸ்ரேல் பிரதமர்
ADDED : மே 04, 2025 10:06 PM

டெல் அவிவ்: ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு பெரும் தாக்குதல் நிச்சயம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை நெருங்கி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் இன்று இஸ்ரேலில் உள்ள விமான நிலையத்தின் மீது ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில். சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் ஹவுதி பயங்கரவாத அமைப்பின் முதல் நேரடி தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு கடுமையான பதிலடி கொடுக்கும் வகையில்,பெரும் தாக்குதல் நிச்சயம்.தனது அமைச்சரவை இன்று மாலை காசா தாக்குதலின் அடுத்த கட்டம் குறித்து விவாதிக்கும் என்றும், ஹமாஸை தோற்கடிப்பதே எங்களது ராணுவம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.
நாங்கள் இரண்டு பணிகளில் கவனம் செலுத்துகிறோம்,'ஒன்று, நமது பணயக்கைதிகளை மீட்டு கொண்டு வருவது. இரண்டு, ஹமாஸை தோற்கடிப்பது,இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.