காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்; ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் பலி
UPDATED : ஜன 05, 2025 10:20 PM
ADDED : ஜன 05, 2025 10:15 PM

கைரோ: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் 12 பேர் உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் 20ம் தேதி பொறுப்பேற்கிறார். அதற்கு முன்னதாக இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் மக்களை விடுவிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், காசாவில் 100க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 12 ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 88 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக ஹமாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.