ஒரே ஒரு ஐபோன் வாங்க 47.6 நாட்கள் உழைக்கணும்; இந்தியாவில் இதுதான் நிலவரம்!
ஒரே ஒரு ஐபோன் வாங்க 47.6 நாட்கள் உழைக்கணும்; இந்தியாவில் இதுதான் நிலவரம்!
ADDED : செப் 20, 2024 10:19 PM

லண்டன்: ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்திய ஐபோன் 16 மாடலை வாங்குவதற்கு ஒருவர் எத்தனை நாட்கள் உழைக்க வேண்டும் என வெவ்வேறு நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.அதின்படி இந்தியாவில் 47.6 நாட்கள் ஒருவர் உழைத்தால் அந்த போனை வாங்க முடியும் எனக்கூறப்பட்டு உள்ளது.
ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸின் விற்பனையை துவக்கி உள்ளது. ஐபோன் 16 விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன் 16 பிளஸ் ரூ.89,900 ஆகவும், ஐபோன் 16 புரோ ரூ.1,19,900 ஆகவும், ஐபோன் 16 புரோ மேக்ஸ் விலை ரூ.1,44,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு விலை உயர்ந்த போனை வாங்குவது என்பது பலரின் கனவாக உள்ளது. சிலர் கவுரவத்திற்காக இந்த மாடல் போன்களை வாங்கி வந்தனர். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த மாடல் போன்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஐபோன்களின் அதிகாரப்பூர்வ விலையை அடிப்படையாக வைத்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெவ்வேறு நாடுகளில் ஒருவர் எத்தனை நாட்கள் பணிபுரிந்தால், அதில் கிடைக்கும் சம்பளம் பணம் மூலம் வேண்டும் என கணக்கிடப்பட்டது.
இதன் முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த ஐபோனை வாங்க சுவிட்சர்லாந்தில் ஒருவர் 4 நாட்கள் பணிபுரிந்தால் போதுமானது.அமெரிக்காவில் 5.1 நாட்களும்ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் 5.7 நாட்களும் ஒருவர் பணிபுரிந்தால் ஐபோன் வாங்க முடியும்
இந்தியாவில் ஐபோன் 16 வாங்க 47.6 நாட்கள் உழைக்க வேண்டும்அதிகபட்சமாக துருக்கியில் 72.9 நாட்களும் பிலிப்பைன்சில் 68.8 நாட்களும், பிரேசிலில் 68.6 நாட்களும் வியாட்நாமில் 53.1 நாட்களும் ஒருவர் பணியாற்ற வேண்டி உள்ளது.