UPDATED : நவ 11, 2024 03:16 PM
ADDED : நவ 11, 2024 03:13 PM

வாஷிங்டன்; கடற்கரையின் மணல் பரப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடக்க முடியாமல் தடுமாறிய வீடியோ அந்நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.
உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்த பெரியண்ணன் அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டது. அந்நாட்டின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் போட்டியிட்ட போது தவறாக பெயர்களை உச்சரித்து கடும் விமர்சனங்களை ஜோ பைடன் எதிர்கொண்டார். அதன் எதிரொலியாக தேர்தலில் இருந்து விலக நேரிட்டது.
இந் நிலையில் தமது வீட்டுக்கு அருகே உள்ள மணல்பாங்கான கடற்கரையில் ஜோ பைடன் நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது. சரியாக நடந்து செல்ல முடியாமல் தடுமாறி இருக்கும் காட்சிகள் வெளியாகி அதை பார்ப்போரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.
81 வயதை எட்டியுள்ள பைடன், ஒரு குழந்தையை போல சரியாக நடக்க முடியாமல் மெல்ல, மெல்ல தடுமாறியபடியே நடந்து செல்கிறார். சிறிதுதூரம் சென்ற பின்னர், மனைவி ஜில் பைடன் உதவி செய்து அவரை அழைத்துச் செல்கிறார். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
தேர்தல் களத்தில் இருந்து விலகிய போதே கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. தற்போது குழந்தை போல தடுமாறி நடந்து செல்லும் வீடியோ வெளியாகி இருக்க, அதை பார்க்கும் அவரது ஆதரவாளர்களும், அமெரிக்க மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.