தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி
தோல்வியை ஒப்புக் கொண்டார் கமலா ஹாரிஸ்; தொடர்ந்து போராட உறுதி
UPDATED : நவ 07, 2024 07:55 AM
ADDED : நவ 07, 2024 06:49 AM

வாஷிங்டன்: அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்வதாக அறிவித்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், தன் போராட்டம் தொடரும் என்று ஆதரவாளர்கள் மத்தியில் அறிவித்தார்.
அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர். தேர்தலில், டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
இது தொடர்பாக, வாஷிங்டனில் உள்ள ஹோவர்ட் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் கமலா ஹாரிஸ் பேசியதாவது:
* அதிபர் தேர்தல் தோல்வியை ஏற்கிறேன்.
* பெண்களின் உரிமைகளுக்காகவும், துப்பாக்கி வன்முறைக்கு எதிராகவும் தொடர்ந்து போராடுவேன்.
* அமைதியான முறையில் அதிகார பகிர்வை டொனால்டு டிரம்ப் கையாள வேண்டும்.
* சில நேரங்களில் நாம் சண்டையிடும் போது, வெற்றி பெற சிறிது நேரம் ஆகும்.
* ஆனால் நாம் வெற்றி பெற மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. இவ்வாறு கமலா ஹாரிஸ் பேசினார்.