UPDATED : ஜூலை 22, 2024 06:27 AM
ADDED : ஜூலை 22, 2024 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியதால் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக கட்சியில் ஜோ பைடனுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எதிர்ப்பு கிளம்பியதாலும், நாட்டு மக்கள் மற்றும் கட்சியின் நலன் கருதியும் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து கமலா ஹாரிஸுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிட எனது முழு ஆதரவை வழங்குவதாக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.