நன்றி... கோடானுகோடி நன்றி...! கட்சி மாநாட்டில் பைடனை புகழ்ந்த கமலா ஹாரிஸ்
நன்றி... கோடானுகோடி நன்றி...! கட்சி மாநாட்டில் பைடனை புகழ்ந்த கமலா ஹாரிஸ்
ADDED : ஆக 20, 2024 09:15 AM

சிகாகோ; ஜோ பைடனின் வாழ்நாள் சேவைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக கமலா ஹாரிஸ் கூறி உள்ளார்.
அதிபர் தேர்தல்
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நிறுத்தப்பட்டு உள்ளார். ஜனநாயக கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸ் களம் காண்கிறார். நெருக்கடி
கமலா ஹாரிஸ் தேர்தலில் களம் கண்டிருப்பது, டிரம்புக்கு பெரும் நெருக்கடியை அளித்துள்ளதாக தெரிகிறது. அண்மையில் வெளியாகி உள்ள கருத்துக் கணிப்புகளின் படி,தேர்தலில் கமலா ஹாரிசுக்கு அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.என்றென்றும் நன்றி
இந்நிலையில், சிகாகோவில் நடைபெற்ற ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் அதிபர் ஜோ பைடனுக்கு கமலா ஹாரிஸ் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் பேசியதாவது: வரலாற்று சிறப்புமிக்க தலைமையை அளித்த அதிபர் ஜோ பைடனுக்கு நன்றி. வாழ்நாள் முழுவதும் தேசத்துக்காக சேவை செய்துள்ளீர்கள். நாட்டுக்கு சேவை செய்துள்ள உங்களுக்கு நாங்கள் என்றென்றும் நன்றி உள்ளவராக இருப்போம் என்று கூறி உள்ளார்.

