‛வழி மேல் விழி வைத்து' மோடிக்காக காத்திருக்கும் போலந்து வாழ் இந்திய வம்சாவளியினர்
‛வழி மேல் விழி வைத்து' மோடிக்காக காத்திருக்கும் போலந்து வாழ் இந்திய வம்சாவளியினர்
UPDATED : ஆக 20, 2024 04:35 PM
ADDED : ஆக 20, 2024 01:13 PM

வார்சாவ் : அரசு முறை பயணமாக போலந்து வரும் பிரதமர் மோடியை எதிர்பார்த்து காத்து இருப்பதாக அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் தெரிவித்து உள்ளனர்.
பிரதமர் மோடி வரும் 21- 23 ஆகிய தேதிகளில் போலந்து மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். அங்கு அந்நாட்டு தலைவர்களை சந்திக்கிறார். இந்தியா - போலந்து இடையிலான தூதரக உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் மோடியின் பயணம் அமைந்துள்ளது. 40 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்து உள்ளது.
பிரதமரின் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து உள்ள இந்திய வம்சாவளியினர், இந்தியாவின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பணிகளுக்காக புகழாரம் சூட்டி உள்ளனர்.
இது தொடர்பாக இந்திய வம்சாவளியினர் சிலர் கூறியதாவது:
மும்பையில் இருந்து அங்கு குடியேறிய சவுரப் கிலிட்வாலா
நாட்டை தன்னிறைவு பெற செய்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மோடியின் பயணம் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என்றார்.
அஜய் சர்மா
பிரதமரின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு நகரங்களில் வசிக்கும் எனது நண்பர்கள், மோடியின் பயண திட்டம் குறித்து கேட்கின்றனர். வார்சாவ் நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு செய்துள்ளோம். 40 ஆண்டுகளுக்கு பிறகு போலந்து தலைவரை பார்ப்பதில் பெருமையாக உள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்பெறும் என்றார்.
வான்யா என்ற 9 வயது சிறுமி
குழந்தைகள் என்றால் குழந்தைகளுக்கு பிடிக்கும். அவர் காட்டும் அன்பு மற்றும் நேசம் ஆகியவை காரணமாக அவரை எனக்கு பிடிக்கும் என்றார்.
இந்திய மாணவர்கள் சங்க தலைவர் கவுரவ் சிங்
இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேசுகிறாரா இல்லையா என தெரியவில்லை. மோடியை வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அவரது வருகையால் உறவு வலுப்பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.