ஆஸ்திரேலியாவிலும் இந்தியருக்கு ‛‛மவுசு'': முதன்முறையாக அமைச்சராகி சாதனை
ஆஸ்திரேலியாவிலும் இந்தியருக்கு ‛‛மவுசு'': முதன்முறையாக அமைச்சராகி சாதனை
ADDED : செப் 12, 2024 11:09 AM

சிட்னி: ஆஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெறுகிறார்.
கோட்டயம் மாவட்டம் பலா மூன்நிலவு என்ற பகுதியில் பிறந்தவர் ஜின்சன் ஆண்டோ சார்ல்ஸ் 35. இவர் 2011 ல் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்து சென்று அங்கு டாப்மென்டல் ஹெ ல்த் மையத்தின் இயக்குநராகவும், சார்லஸ் டார்வின் பல்கலை., பேராசிரியராக பணியாற்றினார். ஆஸி., வடக்கு மாகாணத்தின் சாண்டர்சன் என்ற பகுதியில் நடந்த தேர்தலில் ஜின்சன் எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு ஆஸ்திரேலியே அமைச்சரவையில் விளையாட்டு, இளைஞர்கள் நலம் , கலாசார துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர் கேரள காங்கிரஸ் மாணவர் யூனியன் மற்றும் மலையாள சங்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் . மேலும் இவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா காங்கிரஸ் எம்.பி. அன்டோ அந்தோணியின் மருமகன் ஆவார்.

