ADDED : ஜன 25, 2025 11:49 AM

வாஷிங்டன்: டிரம்பின் துணை செய்திச் செயலாளராக இந்திய- அமெரிக்கரான முன்னாள் பத்திரிகையாளர் குஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்கா அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். அன்றைய தினத்தில் இருந்து பல்வேறு புது புது அறிவிப்புகளை டிரம்ப் வெளியிட்டு வருகிறார். உலக நாடுகளின் கவனம் முழுவதும் அமெரிக்கா பக்கமே இருந்து வருகிறது. இந்த சூழலில், டிரம்பின் துணை செய்திச் செயலாளராக இந்திய- அமெரிக்கரும், முன்னாள் பத்திரிகையாளருமான குஷ் தேசாய் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
யார் இவர் தெரியுமா?
* குஷ் தேசாய் 2024ம் ஆண்டு குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டின் துணைத் தொடர்பு இயக்குநராக இருந்தார்.
* இவர் குடியரசு கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
* இவர் ஆங்கிலம் மற்றும் குஜராத்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசக் கூடியவர்.
* நியூ ஹாம்ப்ஷயரின் ஹனோவரில் டார்ட்மவுத் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
* இவர் அரசியலில் அதிகம் அனுபவம் கொண்டவர்.
* இவர் குடியரசு கட்சியில் ஆராய்ச்சி ஆய்வாளராக சேரும் முன், வாஷிங்டனில் உள்ள ஒரு பத்திரிகையில் 10 மாதங்களுக்கு மேல் நிருபராக பணியாற்றி உள்ளார்.

