விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய குவைத் பிரதமர்
விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வழியனுப்பிய குவைத் பிரதமர்
ADDED : டிச 22, 2024 10:10 PM

குவைத் சிட்டி: பிரதமர் மோடியை, குவைத் பிரதமர் ஷேக் அஹமத் அல் அப்துல்லா அல் அஹமத் அல் சபா விமான நிலையத்திற்கே வந்து வழியனுப்பி வைத்தார்.
அரசு முறை பயணமாக குவைத் சென்ற பிரதமர் மோடிக்கு இன்று, பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு மன்னர் ஷேக் மெஷால் அல் அஹமது அல் ஜாபர் அல் ஷாபாவை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த பயணத்தின் போது, குவைத்தின் உயரிய விருதான ' ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர்' வழங்கப்பட்டது.
இதன் பிறகு அந்நாட்டின் முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள், பல துறையைச் சேர்ந்தவர்கள் மோடியை சந்தித்து பேசினர்
குவைத் பிரதமர் ஷேக் அஹமத் அல் அப்துல்லா அல் அஹமத் அல் சபாவையும் சந்தித்து மோடி பேசினார். அப்போது, இந்தியா வர வேண்டும் என அவருக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி டில்லி கிளம்பினார். அவரை கவுரவிக்கும் வகையில், குவைத் பிரதமர் விமான நிலையம் வந்து பிரதமர் மோடியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.