sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

/

இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியர்களை புகழும் குவைத் ஆட்சியாளர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்

7


UPDATED : டிச 22, 2024 07:03 AM

ADDED : டிச 21, 2024 08:07 PM

Google News

UPDATED : டிச 22, 2024 07:03 AM ADDED : டிச 21, 2024 08:07 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத்: ''குவைத் ஆட்சியாளர்களுடன் நான் பேசும்போது எல்லாம், இந்தியர்களை அவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர்,'' என பிரதமர் மோடி பேசினார்.

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி குவைத் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர் ஒன்று சேர்ந்து பிரதமர் மோடியை வரவேற்றனர்.Image 1359342இதனைத் தொடர்ந்து குவைத்தின் ஷேக் சாத் அல் அப்துல்லா விளையாட்டு உள்ளரங்கில், ' ஹாலா மோடி' என்ற தலைப்பில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: குவைத் வந்ததில் இருந்து அரவணைப்பை என்னால் உணர முடிந்தது. இந்தியாவில் இருந்து குவைத் வருவதற்கு நான்கு மணி நேரங்களே ஆகும். ஆனால், இந்திய பிரதமர் ஒருவர் இங்கு வருவதற்கு நான்கு தசாப்தம் ஆகி உள்ளது.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளீர்கள். இங்கு அனைவரையும் ஒரே இடத்தில் பார்ப்பது என்பது, மினிஇந்தியா கூடியுள்ளது போல் தெரிகிறது. ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் இங்கு வருகின்றனர்.Image 1359343இந்திய வம்சாவளி டாக்டர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், குவைத் மருத்துவ உள்கட்டமைப்பின் பெரிய பலமாக உள்ளனர். இந்நாட்டின் எதிர்கால தலைமுறையை கட்டமைப்பதில் இந்திய ஆசிரியர்கள் உதவுகின்றனர்.

குவைத் தலைவர்களிடம் பேசும்போது, அவர்கள் இந்திய சமூகத்தினரை புகழ்கின்றனர். உங்களின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் திறன் ஆகியவற்றை பார்த்து குவைத் குடிமக்கள் உங்கள் மீது பெரிய மரியாதை வைத்துள்ளனர். இன்று உலகம் முழுவதும் ' உலக தியான தினம்' கொண்டாடப்படுகிறது. இது இந்திய பாரம்பரியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.வர்த்தகம் மற்றும் புதுமைகள் மூலம் ஊக்கத்தை தூண்டும் பொருளாதாரத்தை விரும்புகிறது. இந்தியாவும் புதுமையிலும், பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. புதிய குவைத்திற்கு தேவையான திறன், தொழில்நுட்பம், புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் மனித வளம் இந்தியாவிடம் உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






      Dinamalar
      Follow us