அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் நிலைமை கவலைக்கிடம்
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் நிலைமை கவலைக்கிடம்
ADDED : ஜூலை 19, 2025 05:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, கூட்டத்திற்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது.
சான்டா மோனிக்கா பவுலவார்ட் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் 5 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 8- 10 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களுக்கு லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவல் அறிந்த மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.