லலித் மோடி, தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று அறிவிப்பு
லலித் மோடி, தான் ஒரு பிரிட்டிஷ் குடிமகன் என்று அறிவிப்பு
ADDED : நவ 15, 2026 07:52 AM

லண்டன்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான லலித் மோடி, தான் அதிகாரப்பூர்வமாக பிரிட்டன் குடியுரிமை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றியபோது அவர் இந்த முக்கியத் தகவலைப் பொது வெளியில் பகிர்ந்து கொண்டார். பிரிட்டன் நாட்டின் மக்கள், நிறுவனங்கள், பாரம்பரியம் மற்றும் மதிப்புகளைத் தான் ஆழமாக மதிப்பதாகவும், இங்கிலாந்து நீண்ட காலமாக தனது இல்லமாக திகழ்வதாகவும் அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் பிறந்தநாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டது தமக்கு மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்ட அவர், தனது பதிவை 'காட் சேவ் தி கிங்!' என்று நிறைவு செய்தார்.
ஐபிஎல் தொடர்பான நிதி முறைகேடு புகார்களைத் தொடர்ந்து, கடந்த 2010-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து வெளியேறி லண்டனில் வசித்து வந்த லலித் மோடி, தற்போது பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
